ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அபுதாபியின் அஜ்பான் பகுதியைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை (ஏப். 3) ஈரான் வீசிய 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் 5 இந்தியர்கள் மற்றும் 6 நேபாள நாட்டினர் உள்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் தாக்குதல்களில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, யேமன், இந்தோனேசியா, அஜர்பைஜான் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த 203 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்துடன், குவைத் நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தைக் குறிவைத்து கடந்த திங்கள்கிழமை (மார்ச் 30) அன்று ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
5 Indians have been seriously injured in Iran's attack on Abu Dhabi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்குமா?
குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!








