பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் குறித்து...

Iranian attacks

ஈரான்... - கோப்புப் படம் | ஏபி

Updated On :

பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத்தின் முக்கிய தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், பஹ்ரைனின் அல்-ரிஃபா மற்றும் அவாலி ராணுவத் தளங்களிலுள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது சனிக்கிழமை (நவ. 21) இரவு ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில், அமெரிக்காவின் 2 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக, ஈரானிய படைகள் அறிவித்துள்ளன. ஈரானின் வான்வழியில் அமெரிக்காவின் ட்ரோன்கள் தொடர்ந்து அத்துமீறியதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் மக்களின் பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலைக் கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரானின் வான்வழித் தாக்குதல்களை இடைமறித்துத் தகர்த்துள்ளதாகவும், பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏற்கெனவே, சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் கடந்த நவ.18 ஆம் தேதி முதல் தாக்குதலைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran's Revolutionary Guard has announced that it carried out an attack on key U.S. military assets in Bahrain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.