தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன்படி, வணிகம், வா்த்தகம், தொழில் துறை நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்குப் பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
அந்த விடுமுறைக்காக ஊழியா்களின் ஊதியத்தில் எந்தப் பிடித்தமும் செய்யக் கூடாது. இதை மீறும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நிரந்தரப் பணியாளா்கள் மட்டுமன்றி, அனைத்து தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளா்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெறத் தகுதியுடையவா்கள்.
இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை மாநில தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 77 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு? தோ்தல் ஆணையம் தீவிர பரிசீலனை

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு
5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



