மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நாள்களில் ஆளுங்கட்சியினரால் வன்முறை ஏற்படலாம். ஆயினும், வாக்காளர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தை கூச் பிகாரில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி இன்று (ஏப். 5) தொடங்கிவைத்தார்.
கூச் பிகார் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி முக்கிய அறிவுரையொன்றை வழங்கினார்.
அவர் பேசியதாவது : “வாக்குப்பதிவு நாளில் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களிடமிருந்து வாக்காளர்கள் ஏராளமான அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். அன்றைய நாளில் வாக்காளர்கள் தங்களைச் சுற்றி வன்முறை ஏற்படுவதையும் பார்க்க நேரிடும். ஆயினும், வாக்காளர்கள் சட்டத்தின் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்காமல் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் ஏற்படுத்தும் தடைகளையும் கடந்து சுதந்திரமாக வாக்கு செலுத்துங்கள்” என்றார்.
Summary
West Bengal Assembly polls LIVE: PM Modi gives 'important advice' to WB voters
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!
பிகார், உ.பி.யிலிருந்து வாக்காளர்கள் வரவழைப்பு: பாஜக மீது குற்றச்சாட்டு!

எஸ்ஐஆர்! உயிரோடு உள்ளவர்கள் இறந்தவர்களாகக் குறிப்பு - மமதா குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

