தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

மணிப்பூரில் 21 சட்டவிரோத பதுங்கு குழிகள் அழிப்பு: பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 12:40 am IST

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், உக்ரூல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 21 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன; தெங்நோபால் மாவட்டத்தில் 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக, உக்ரூல் மாவட்டத்தில் உள்ள மொங்கோட் செப்பு கிராமத்தில் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘லித்தான் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிங்புங் கிராமத்தில் 14 பதுங்கு குழிகளும் மற்றும் மொங்கோட் செப்பு கிராமத்தில் 7 பதுங்கு குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு சனிக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், தெங்நோபால் மாவட்டத்தின் மோரே பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையில், 13 வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.