மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரத்தில் கடந்த நான்காண்டுகளாக நடந்தது என்ன என்பது பற்றி

TCS Nashik case: Tata Sons Chairman orders internal inquiry, police custody of operations head extended

கைது நடவடிக்கை - ANI

Published On :

நாசிக்: அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், மத ரீதியான அழுத்தங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நாசிக்கில் இயங்கி வரும் டிசிஎஸ் அலுவலகத்தில் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடந்திருக்கும் இந்த மிக அசிங்கமான நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை, ஏதோ ஒரு மோசமான நடவடிக்கை என்று இல்லாமல், தொடர்ச்சியாக பெரும்பாலான பெண்கள் துன்புறுத்தலுக்கு இலக்காகியிருக்கிறார்கள்.

பெண்கள் தவறாக நடத்தப்பட்ட விதம், அவர்களது உடலை வர்ணிப்பது, விமர்சிப்பது, குடும்ப விஷயங்களை விமர்சிப்பது, குழந்தை இல்லை என கேலி செய்வது, உடல் குறித்து கேலி, கிண்டல் செய்வது, இந்து மதத்தை இழிவாகப் பேசி, நம்பிக்கையை அவதூறாகப் பேசுவது போன்றவற்றை குற்றவாளிகள் தொடர்ச்சியாக ஒன்று போல பேட்டர்னாகவே செய்திருக்கிறார்கள்.

பெண்களை நேரடியாக தொட்டுப் பேசுவது, பிடிக்கவில்லை என பெண்கள் காட்டினால் அவர்களை அதிகம் துன்புறுத்துவது, அலுவலக கூட்டங்களின்போது, குடும்ப விவகாரங்கள் குறித்து பெண்களிடம் கேள்வி கேட்பது, ஏன் குழந்தை பிறக்கவில்லை என்பது போன்ற கேள்விகளை எழுப்புவதும் தொடர்ந்துள்ளது.

இங்கு மனிதவள மேலாளராக இருந்த பெண், குற்றவாளிகளுக்கு பெண்களை அறிமுகம் செய்து வைப்பதையே வேலையாக செய்திருக்கிறார்.

முக்கிய குற்றவாளிகளில் ஒரவரான தௌசிஃப் அத்தார், பெண்களிடம் மிகவும் தவறாக நடக்க முயற்சித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், எந்த மதத்தைச் சேர்ந்த பெண்களையும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுமாறு வற்புறுத்தப்பட்டது, ஆடை உடுத்த கட்டாயப்படுத்துவது, ரமலான் நோன்பிருக்க வற்புறுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் டிசிஎஸ் நிறுவனம் உடனடியாக வேலையை விட்டு நீக்கியிருககிறது. விசாரணைக்கும் ஒத்துழைப்பதாக அறிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.