தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என நான் எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார், மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா என்று எதிர்க்கட்சியினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவிகிதம் கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று உறுதியளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, தமிழகத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்கள் மகளிருக்கானதாக இருக்கும். தென் மாநிலங்களுக்கான பங்கீடு குறையாது என நான் உறுதியளிக்கிறேன். உங்களால் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். ஆனால், அதனை மகளிர் மன்னிக்க மாட்டார்கள். ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை சதவிகிதம் குறையாது. தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என கையெழுத்திட்டு தருகிறேன்.
தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும்.
எனவே,தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க நான் தயாராக இருக்கிறேன், இன்ற இந்த மசோதாவை நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த மசோதா தோல்வியடையலாம்; பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அமித் ஷா பேசினார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது சாதிப் பட்டியலைத் தாமதப்படுத்தும் நோக்கில் மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளை அமித் ஷா நிராகரித்துள்ளார்.
நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை எட்டியபோதும்கூட, காங்கிரஸ் அரசு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. நாட்டை தெற்கு - வடக்கு என்று பிரிப்பதை ஏற்க முடியாது. நமது நாட்டில் பிரிவினை அரசியல் எடுபடாது. மாநிலங்களுக்கு இடையே எந்த பாகுபாட்டையில் மத்திய அரசு பார்க்கவில்லை என்றார் அமித் ஷா.
மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் நிறைவடைந்து வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. முன்னதாக, மக்களவை உறுப்பினர்களுக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை ஆற்றினார்.
Summary
Amit Shah has challenged, "I am ready to make a written commitment; are you ready to fulfill it?"
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலில் புதிய பிரதட்சண பாதை தொடக்கம்!

Podcast | அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்போகும் பாதை! | News and Views | Epi - 42 |

அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை!

நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



