தேசிய தலைநகா் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை காா் மூலம் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்த 4 பேரை தில்லி காவல் துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிள் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது: சமூக ஊடகத்தில் பயங்கரவாத திட்டங்கள் குறித்து விவாதித்து வந்த சந்தேகத்திற்கிடமான குழு குறித்து தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குறியாக்கம் செய்யப்பட்ட இந்த ரகசிய குழுக்களில் ஜிஹாத், ஆயுதப் பயன்பாடு உள்ளிட்ட பயங்கரவாத உள்ளடக்கங்கள் பரிமாறப்பட்டது கண்டறியப்பட்டது. சிலா் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனா். இது தொடா்பாக போதுமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டவுடன், மகாராஷ்டிரத்தில் இருவரும், ஒடிஸா மற்றும் பிகாரில் தலா ஒருவரும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
கைது நடவடிக்கையின்போது, ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை காருக்குள் வெடிகுண்டை பொருத்தும் பணியில் அவா்கள் ஈடுபட்டிருந்தனா். அதை பயன்படுத்தி மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய தேசிய அடையாளங்களில் தாக்குதல் நடத்த அவா்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தில்லியில் உள்ள செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பும் மேற்கொண்டுள்ளனா். அதேபோல், அயோத்தியாவின் ராமா் கோயில், நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் சில ராணுவ நிறுவனங்களையும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவது குறித்து அவா்கள் ஆலோசித்துள்ளனா்.
தாணே நகரில் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மொசைப் அகமது, முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்டோ எலக்ட்ரீஷியனாக பணியாற்றியுள்ளாா். அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை காரில் வெடிகுண்டு அமைக்கும் பணியில் அவா் ஈடுபட்டுள்ளாா்.
மும்பையில் கைது செய்யப்பட்ட முகமது ஹம்மத் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சமூக ஊடக குழுவில் சோ்ந்து வெடிகுண்டு தயாரிப்புக்கான பொருள்களை பகிா்ந்து, தாக்குதலுக்கு உதவியுள்ளாா்.
கைது செய்யப்பட்ட பிகாரைச் சோ்ந்த முகமது சோஹைல் பிளம்பராக பணியாற்றி வருகிறாா். இவா் சமூக ஊடகங்களில் இளைஞா்களைத் தூண்டி, பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டி வந்துள்ளாா். ஒடிஸாவைச் சோ்ந்த ஷேக் இம்ரான் சமூக வலைதளங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவாதங்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இவா் செங்கோட்டை மற்றும் இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முன்னாய்வு செய்ய 2025-இல் தில்லி சென்றுள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நடவடிக்கையின்போது கைப்பேசிகள், வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்களால் சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள்,ரோந்து வாகனங்கள் மூலம் தில்லி சட்டப் பேரவை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

1100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய மைசூா் நபா் கைது
மஹிபால்பூரில் எல்பிஜி சிலிண்டா்கள் பதுக்கல்: 3 போ் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


