இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு சென்ற ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதம் 13% குறைந்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு சென்ற ஆண்டைவிட இந்தாண்டு மார்ச் மாதம் 13% குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மார்ச் மாதத்திற்கான எரிவாயு பயன்பாடு 2.379 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் 2.729 மில்லியன் டன்களாக இருந்தது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து இந்தியா அதிகளவு எரிவாயு இறக்குமதியை நம்பியுள்ள நிலையில் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ளது.
மத்திய அரசு எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக வீடுகளுக்கான எரிவாயு உபயோகத்திற்கு முன்னுரிமை கொடுத்து வணிகப் பயன்பாட்டிற்கான விநியோகத்தைக் குறைத்தது.
தரவுகளின்படி, வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விற்பனை 8.1% குறைந்து 2.219 மில்லியன் டன்களாக உள்ளது.
எரிவாயு பற்றாக்குறையின் தாக்கம் வீட்டு உபயோகம் அல்லாத பிரிவுகளில் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தனது எரிவாயு தேவையில் சுமார் 60% இறக்குமதி மூலம் பெறுகின்றது. இதனால், எரிவாயு பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், பெட்ரோலிய வேதிப்பொருள்கள் உற்பத்தியில் எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 1.1 மில்லியன் டன்களாக இருந்த எரிவாயு உற்பத்தி, இந்தாண்டு மார்ச் மாதம் 1.4 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதத்தில் சரிவு ஏற்பட்ட நிலையிலும், 2025-26 நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த எரிவாயு பயன்பாடு 6% அதிகரித்து 33.212 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.
Summary
Cooking Gas Usage in India Drops by 13%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் தீ விபத்து: சமையலா் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சிவகிரிப்பட்டியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



