மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி 78.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவின்படி மாலை 3 மணி நிலவரத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3.60 கோடி வாக்காளர்களில் இதுவரை 78.77 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி,
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக, மேற்கு மேதினிபூரில் - 81.07%, ஜார்கிராம் - 81.04%, தெற்கு தினாஜ்பூர் - 81.49%, பாங்குரா - 79.88%, பிர்பூம் - 80.22%, கிழக்கு மேதினிபூர் - 78.94%, மால்டாவில் - 76.22%, டார்ஜிலிங் - 76.54%, புருலியாவில் - 75.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
Summary
The Election Commission of India has stated that 78.77 percent of votes have been recorded in the state of West Bengal as of 3:00 PM today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

மேற்கு வங்கம்: 5 மணி வரை 89.99% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

மேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


