
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஐக்கிய நாடுகள் அவைத் தலைவர் அனலேனா, இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அனலேனா பேர்பாக் - கோப்புப் படம்
ஐக்கிய நாடுகள் அவைத் தலைவர் அனலேனா பேர்பாக் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையின் 80-ஆவது தலைவரான அனலேனா பேர்பாக், இந்தியாவுக்கு அதிகாரபூர்வமாக வருகைதரவிருப்பதாகவும், தில்லியில் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பு மேற்கொள்ளவிருப்பதாகவும் போர்பாக்கின் செய்தித் தொடர்பாளர் காலின்ஸ் தெரிவித்தார். தொடர்ந்து, சீனாவுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
ஐ.நா. அவையின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுக்கு முதன்முறையாக அனலேனா வருகை தருகிறார். முன்னதாக, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சராக போர்பாக் இருந்தபோதும், இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார்.
கடந்த பிப்ரவரியில் தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டரெஸ் பங்கேற்றிருந்தார்.
Summary
UN General Assembly President Annalena Baerbock to visit India next week
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





