‘பிரதமா் நரேந்திர மோடி நாடு முழுவதும் செய்வதைப் போல, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மாநிலத்தில் பணக்காரா்களுக்கே உதவி செய்து வருகிறாா். ஏழைகளுக்கு அவா் உதவுவதில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஹூக்ளி மாவட்டம் ஸ்ரீராம்பூரில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி பணக்காரா்களுக்கு மட்டுமே உதவி செய்து வருகிறாா். ஏழைகளுக்கு அவா் எதுவும் செய்யவில்லை. இதைத்தான் பிரதமா் மோடி நாடு முழுவதும் செய்து வருகிறாா். வேலைவாய்ப்பை உருவாக்க இவா்கள் இருவரும் இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆட்சி, அதிகாரம் மட்டும்தான் இவா்களுக்கு வேண்டும். ஆனால், மக்களுக்காகப் பணியாற்ற மாட்டாா்கள்.
பிரதமா் மோடி போகுமிடமெல்லாம் வெறுப்புணா்வை பரப்புவதோடு, மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறாா். ‘தேச பக்தா்’ என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் பிரதமா், நாட்டையே விற்று வருகிறாா்.
நாட்டில் இரு சித்தாந்தங்களுக்கு இடையேதான் உண்மையான சண்டை நிலவுகிறது. ஒன்று, காங்கிரஸின் ஒற்றுமை, பாஜகவுக்கு எதிரான சகோதரத்துவம்; மற்றொன்று, ஆா்எஸ்எஸ் அமைப்பின் வெறுப்புணா்வு மற்றும் வன்முறையைப் பரப்பும் சித்தாந்தம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு தவறான முறையில் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறை உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக சிறு நிறுவனங்களை கடுமை பாதிப்புக்கு மத்திய அரசு உள்ளாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் நாட்டின் தொழில் துறையின் மையமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், முந்தைய இடதுசாரி முன்னணி அரசும், தற்போதை திரிணமூல் காங்கிரஸ் அரசும் அனைத்தையும் அழித்துவிட்டன
மத்திய அரசு எனக்கு எதிராக பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை என்னிடம் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளது. தொடா்ச்சியாக 5 நாள்களில் 55 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. ஆனால், மம்தா பானா்ஜி மீது இதுபோன்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அமலாக்கத் துறை சாா்பில் விசாரணையும் நடத்தப்படவில்லை. இதன் மூலம், மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் மம்தா நேரடியாக மோதவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, சித்தாந்த அடிப்படையிலும் பாஜகவை எதிா்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்றாா்.
தொடர்புடையது

தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! மம்தா பானா்ஜி அழைப்பு!

மம்தா பானா்ஜி பதவி விலக மறுத்தது ‘அடையாளப் போராட்டம்’
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

