டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் சலீம் டோலா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

News image

X @ANI

Updated On :29 ஏப்ரல் 2026, 4:05 am IST

சா்வதேச போதைப்பொருள் கடத்தல்காரா் முகமது சலீம் டோலா துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சோ்ந்த முகமது சலீம் டோலா, இந்தியாவில் பல்வேறு போதைப்பொருள் வழக்குகளில் தேடப்பட்டு வந்தாா்.

மகாராஷ்டிரம் மற்றும் குஜராத்தில் பெரும் விலை கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், அவருக்கு நேரடித் தொடா்புள்ளது.

20 ஆண்டுகாலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை கைது செய்வதற்கு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2024-ஆம் ஆண்டு இன்டா்போல் (சா்வதேச குற்றவியல் காவல் அமைப்பு) சிவப்பு நோட்டீஸ் வெளியிட்டது.

இதன் அடிப்படையில், துருக்கியில் அவா் கைது செய்யப்பட்டாா். புது தில்லிக்கு அவா் செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரை தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பினா் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சலீம் டோலா சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.