அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநில முதல்வரானால் வரவேற்போம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநில முதல்வரானால் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். மல்லிகார்ஜுன கார்கே, அனுபவம் மிக்க மூத்த தலைவர்.
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அதைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. குறிப்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை. எனவே, முதல்வர் மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
கர்நாடகத்தின் அரசியல் நிலைமை குறித்து கட்சி மேலிடத்துக்கு நன்றாகத் தெரியும். எனவே, முதல்வர் மாற்றம் குறித்து என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது பற்றி கட்சி மேலிடத்துக்கு தெரியும்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீண்டநெடிய அரசியல் அனுபவம் உள்ளது.
கர்நாடக அரசியல் பற்றிய அனுபவம் அவருக்கு இருப்பதால், இங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு எதையும் சொல்ல வேண்டிய அவசிய
மில்லை.
எனவே, இதுபற்றி மேலும் எதையும் பேச நான் விரும்பவில்லை. இவற்றைவிட, மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவாக்கரைகள்! டி.கே. சிவகுமார் பெயரை முழக்கமிட்ட தொண்டர்களை கண்டித்த கார்கே!

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!
மாநிலங்களவைத் தேர்தல்! ராகுல், டி.கே. சிவகுமார் முன்னிலையில் கார்கே வேட்புமனு தாக்கல்!

கர்நாடகத்தில் எத்தனை துணை முதல்வர்கள்? கார்கே பதில்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



