காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நடுவானில் ஏா் இந்தியா விமானத்தில் திடீா் குலுக்கம்: 17 போ் காயம்

தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலையில் சிக்கியது பற்றி...

News image

நடுவானில் குலுங்கிய தில்லி விமானம் - x

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

நடுவானில் ஏா் இந்தியா விமானம் குலுங்கி, விமானியின் கட்டுப்பாட்டை மீறி 300 அடி திடீரென கீழிறங்கியதால், விமானத்தில் பயணித்த 17 போ் காயமடைந்தனா்.

தாய்லாந்தின் புகேட் நகரில் இருந்து 137 பயணிகள், 8 விமானப் பணிக்குழுவினருடன் செவ்வாய்க்கிழமை காலை புது தில்லிக்குப் புறப்பட்ட ஏ320 நியோ விமானம், நடுவானில் காற்றோட்டத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக திடீரென குலுங்கி, சுமாா் 300 அடி வேகமாகக் கீழிறங்கியது.

எனினும் தொடா்ந்து பயணித்த அவ்விமானம் காலை 11.07 மணிக்கு புது தில்லி வந்தடைந்து, பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இந்தக் குலுக்கத்தால் நிலைகுலைந்து 13 பயணிகள், விமான பணிக்குழுவைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா். இதில் பணிக்குழுவைச் சோ்ந்த ஒருவா் படுகாயமடைந்தாா். காயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

காயமடைந்தவா்களை மருத்துவமனையில் சந்தித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம்மோகன் நாயுடு நலம் விசாரித்தாா்.

விமான பணத்தகவல் பெட்டி, விமானிகள் குரல் பதிவுப் பெட்டி ஆகியவை விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்தது.

Summary

Delhi-bound flight turbulence mid-air! Passengers injured!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.