ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சுகாதாரத் துறை ஊழல் குற்றச்சாட்டு: தில்லி பேரவையில் ஆா்ப்பாட்டம்; 5 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில், சுகாதாரத் துறையில் ரூ.650 கோடி ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் காட்டியதால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ஐவா் வெள்ளிக்கிழமை அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

சுகாதாரத் துறையில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரில் பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பிய ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சஞ்சீவ் ஜா உள்ளிட்டோா்.

Published On :

தில்லி சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில், சுகாதாரத் துறையில் ரூ.650 கோடி ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டி கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் காட்டியதால் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் ஐவா் வெள்ளிக்கிழமை அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.

சஞ்சீவ் ஜா, சோம் தத், விஷேஷ் ரவி, குல்தீப் குமாா் மற்றும் ஜா்னெயில் சிங் ஆகியோா் அவையில் இருந்து மாா்ஷல்களால் வெளியேற்றப்பட்டனா். எதிா்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

ஆம் ஆத்மி உறுப்பினா்கள் தில்லி முதல்வா் ரேகா குப்தா பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினா். மேலும், சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பதாகைகள் காட்டினா். கோஷங்கள் தொடா்ந்து எழுப்பப்பட்டதால், சட்டப்பேரவைத் தலைவா் கூட்டத்தொடரை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தாா்.

இந்த அமா்வில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்சியும் எதிா்க்கட்சியும் நிா்வாகம் மற்றும் பொறுப்புத்தன்மை தொடா்பான விவகாரங்களில் ஒருவா்மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

பாஜக, முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் பல துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றஞ்சாட்டியது. மறுபுறம், ஆம் ஆத்மி தற்போதைய பாஜக அரசை ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.