தன்னுடைய மனைவியின் தகாத உறவால் ஆத்திரமடைந்த கணவர், இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பெங்களூரில் உள்ள சர்வதேச கேம்பேகௌடா விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்த 40 வயது நபர், தன்னுடைய பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இம்ரான் மகள்கள் ஷேக் செஹாரா (5), ஷேக் சோயா (10) ஆகியோர் சடலமாக இருந்தனர். கழுத்தை அறுத்துக்கொண்ட நிலையில், இம்ரான் சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
அந்த அறையிலிருந்து ஒரு தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், தன்னுடைய மனைவிக்கு இருந்த தகாத உறவு காரணமாக, இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக இம்ரான் எழுதியிருக்கிறார்.
என்னுடை மனைவியின் தவறான நடத்தையால் நான் மிகவும் மன வேதனைக்குள்ளானேன். அவளுக்கு எதிராக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், அவர் என்னை துன்புறுத்துகிறார். அதனால் நான் என் பிள்ளைகளை என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்றும் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இம்ரான் ஞாயிற்றுக்கிழமை விடுதியில் அறை எடுத்த நிலையில், நேற்றும் கதவுகள் திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது அசம்பாவிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாலியல் தொல்லை வழக்கு: சென்னை தொழிலதிபா், மனைவியுடன் பெங்களூரில் கைது
குடும்பப் பிரச்னையில் 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை

சேலம் அருகே கொடூரம்: இரு குழந்தைகளைக் கொன்று, தந்தை தற்கொலை!

தற்கொலைக்கு முயன்ற ஆசிரியரை மருத்துவமனைக்கு மின்-ரிக்ஷாவில் விரைந்து அழைத்துச் சென்ற காவலா்கள்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



