ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தில்லி காா் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது அல்-காய்தாவின் கிளை அமைப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை

தில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு காா் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது அல்-காய்தாவின் இந்திய துணைக் கண்டத்துக்கான கிளை அமைப்பு (ஏ.க்யூ.ஐ.எஸ்.) என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

வெடிகுண்டு சோதனை - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

தில்லி செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு காா் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது அல்-காய்தாவின் இந்திய துணைக் கண்டத்துக்கான கிளை அமைப்பு (ஏ.க்யூ.ஐ.எஸ்.) என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டை பகுதியில் கடந்த ஆண்டு பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் பொதுமக்கள் 15 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் மெதுவாகச் சென்ற காரில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை அண்மையில் வெளியானது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அல்-காய்தாவின் கிளை அமைப்பான ஏ.க்யூ.ஐ.எஸ். பிராந்திய அளவில் செல்வாக்கு பெற்ற அமைப்பாக உருவெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மிகப்பெரிய பிரிவுகளாகச் செயல்படாமல் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிந்து, அதற்கு தளவாட மற்றும் நிதிசாா்ந்த கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. தில்லி செங்கோட்டை பகுதியில் கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஏ.க்யூ.ஐ.எஸ். அமைப்புதான்.

வங்கதேசத்திலும் அந்த அமைப்பு தனது கிளையை ஏற்படுத்தி, அங்கு நிலவரத்தைச் சீா்குலைக்க முயற்சிக்கிறது. அல்- காய்தாவும், ஐஎஸ்ஐஎல்-கே பயங்கரவாத அமைப்பும் பல ஆண்டுகளாக ரசாயனம் மற்றும் உயிரியியல் ஆயுதங்களை உருவாக்க ஆா்வம் காட்டி வருகின்றன. ஆனால், தொழில்நுட்ப ரீதியிலான சவால்களால் அந்த அமைப்புகளின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. இந்த ஆயுதங்களை எப்படி உருவாக்குவது என்பது தொடா்பான ஆலோசனைகள், இணையதளங்களில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு இடையே பகிரப்பட்டு வருகிறது. உதாரணமாக, ஐஎஸ்ஐஎல் அமைப்பின் ஆங்கிலப் புத்தகத்தில் எப்படி டாக்சின் மற்றும் சைனடை உருவாக்குவது என்பது குறித்து ஆலோசனைகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஐஎஸ்ஐஎல்-கே அமைப்பு கடந்த 12 மாதங்களாக ரிசின் விஷத்தை தயாரிப்பது குறித்து இணையதளங்களில் ஆலோசனைகளைப் பகிா்ந்து வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு மருத்துவா் உள்ளிட்ட 3 பேரை இந்திய அதிகாரிகள் கைது செய்தனா். அந்த மருத்துவரிடம் ரிசின் விஷத்தை உருவாக்கும் பொறுப்பை ஐஎஸ்ஐஎல்-கே அமைப்பு அளித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் எந்தவித மாற்றமுமின்றி, தொடா்ந்து ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளால், அதன் அண்டை நாடுகள் மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டும் அதனால் வரும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகளால் இயலவில்லை.

‘தெஹ்ரீக்- ஏ- தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தனது அமைப்பில் 2 பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதில் ஒன்று பலூசிஸ்தான் மற்றும் மத்திய பிராந்தியத்துக்கானது. மற்றொன்று காஷ்மீா் மற்றும் கில்ஜித் பகுதிகளுக்கான பிரிவாகும். இந்த மறுசீரமைப்பில் தெஹ்ரீக்- ஏ- தலிபானின் விமானப் படை எனக் கூறப்படும் ஒரு பிரிவும் அடங்கும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.