பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

மின்சாரம் பாய்ந்து பசு பலி: ஆத்திரத்தில் மின்மாற்றியை அடித்து நொறுக்கிய மக்கள்!

மின்மாற்றியை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் பற்றி..

Cow Dies from Electric Shock

மின்மாற்றியை அடித்து நொறுக்கிய மக்கள் - X

Published On :

மத்தியப் பிரதேசத்தில் மின்சாரம் பாய்ந்து பசு பலியானதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின்மாற்றியை சரமாரியாகத் தாக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பசு கால்நடை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, இந்து வழிபாட்டில் புனித தெய்வமாகவும் போற்றப்படுகிறது. உழவுக்கு துணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வட இந்தியாவின் பல பகுதிகளில் கோ பூஜை, கோவர்தன பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. பசு பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், மின்மாற்றி அருகே சென்ற பசு ஒன்று, மின்மாற்றியிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியது.

மின் கட்டமைப்பினால் ஏற்பட்ட அலட்சியத்தின் காரணமாக, மின்மாற்றியில் மின் கசிவு ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் உள்ள மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களை சரமாரியாக அடித்துச் சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நிலைமை மோசமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் திரண்டனர். சட்ட அமலாக்க அதிகாரிகள் மக்களை அமைதிப்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சேதமடைந்த மின்மாற்றியைச் சரிசெய்து தருவதாகவும், பசுவின் உரிமையாளருக்கு ஏற்பட்ட இழப்பிற்கு இழப்பீடு வழங்குவதாகவும் மின்சாரத் துறை நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து, அங்கிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.

In an Indian village, a cow was killed by a powerful electric shock from a transformer.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.