
சிஎம்ஆர்எல் பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்!
பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தியது பற்றி..

பினராயி விஜயனின் மகள் டி. வீணா - TNIE
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி. வீணா சம்பந்தப்பட்ட சிஎம்ஆர்எல் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை புதிய தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
துபாய் நகருக்கு சுமார் ரூ. 85 லட்சம் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விவரங்கள் அடங்கிய, கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் கையால் எழுதப்பட்ட குறிப்புகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்திய நாணய மதிப்பில் சுமார் ரூ. 20.05 கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் அந்தக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஷோன் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பினராயி விஜயன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே பாஜக கட்சியின் நிலைப்பாடு.
2011-16 காலகட்டத்தில் இருந்த யுடிஎஃப் அரசின்போது முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது விஜயன் கூறிய வார்த்தைகளையே தான் மீண்டும் கூறுவதாகத் தெரிவித்தார்.
மானம் இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக பினராயி விஜயன் தயாராக இருக்க வேண்டும்.
தற்போது வெளியாகும் தகவல்களின்படி, 1996-ல் விஜயன் மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இன்று வரையிலான கடந்த 30 ஆண்டுக்கால பரிவர்த்தனைகள் தொடர்பான விவகாரங்கள், தற்போது வெளியாகி வெளிச்சத்திற்கு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்ட பணம் பின்னர் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. அதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன. பினராயி விஜயன் தானாக முன்வந்து விலகாவிட்டால், எல்டிஎஃப் அவரை அப்பதவியிருந்து நீக்க வேண்டும்.
வழக்கின் பின்னணி
கேரளத்தைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான சிஎம்ஆர்எல் மற்றும் வீணாவால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பானதே இந்த பணமோசடி வழக்கு.
எந்தவித சேவையையும் பெறாமலேயே 'எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு சிஎம்ஆர்எல் நிறுவனம் ரூ. 2.78 கோடியை வழங்கியது என்ற குற்றச்சாட்டு குறித்து இந்த விசாரணையாகும்.
The BJP on Thursday demanded the resignation of Pinarayi Vijayan as the Leader of Opposition in the Keralam Assembly following fresh revelations by the ED in its probe into the CMRL money laundering case involving his daughter Veena T.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



