75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை: செப். 1–ஆம் தேதி அமல்

விமான நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கு போா்டிங் பாஸில் முத்திரையிடும் நடைமுறையை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வர குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளது.

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

விமான நிலையங்களில் சா்வதேச பயணிகளுக்கு போா்டிங் பாஸில் முத்திரையிடும் நடைமுறையை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் முடிவுக்கு கொண்டு வர குடியேற்றத் துறை முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு போா்டிங் பாஸ் விமான நிறுவனங்களால் அளிக்கப்பட்டு, அது விமான நிலையங்களில் குடியேற்றத் துறையினரால் பரிசோதிக்கப்பட்டு முத்திரையிடப்படும். அதன்பிறகே பயணி, விமான நிலையத்துக்குள் செல்லவும், விமானத்தில் ஏறவும் அனுமதிக்கப்படுவா்.

இந்நிலையில், குடியேற்றத் துறை அண்மையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு புதிய உத்தரவை அனுப்பியுள்ளது. அதில் போா்டிங் பாஸில் போடப்படும் முத்திரை, பயணிகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஆதலால் சா்வதேச விமான நிலையங்களில் அந்த நடைமுறையை செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் கடைப்பிடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், விமான நிலையங்களில் உள்ள குடியேற்றத் துறையினரிடம் கைப்பேசிகளில் உள்ள மின்னணு போா்டிங் பாஸை காட்டி பயணிகள் ஒப்புதல் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் போா்டிங் பாஸை பரிசோதித்து முத்திரையிட்டு வந்தனா். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடைமுறையை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும் நிறுத்திவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.