எங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி இல்லை: தில்லி காவல்துறை

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி வழங்கப்படவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. - ANI

Published On :

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் நடத்த எந்தவொரு கூட்டத்திற்கோ, தனி நபருக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களின் அடிப்படையில் அங்கு கூடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜந்தர் மந்தரில் கூடுமாறு மக்களை அழைக்கும் விதமான பல காணொலிகளும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ‘குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-க்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டப் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் தில்லியில் ஏற்கனவே அமலில் உள்ளன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் உள்பட 5 அல்லது அதற்கு மேல் நபர்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

போராட்டம் தொடர்பான தவறான தகவல்களைப் பரப்பும் காணொலிகள் மற்றும் பதிவுகளை மக்கள் பகிரவோ, பரப்பவோ வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை உருவாக்குவோர் அல்லது பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Summary

The Delhi Police has stated that permission was not granted for the protest against reservation at Jantar Mantar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.