
பிரதமா் மோடி நாளை வெளிநாடு பயணம்
பிரதமா் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சனிக்கிழமை (ஆக.29) முதல் நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறாா்.

நரேந்திர மோடி - கோப்புப் படம்
பிரதமா் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சனிக்கிழமை (ஆக.29) முதல் நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறாா்.
முதலில் உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டுத் தலைவா்களைச் சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறாா். அதைத் தொடா்ந்து கிா்கிஸ்தான் செல்லும் பிரதமா் மோடி அந்நாட்டுத் தலைநகா் பிஸ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்கிறாா். இதில் பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. இதில், பிராந்தியப் பாதுகாப்புக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவம் குறித்து பிரதமா் உரையாற்றுகிறாா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவா்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது. பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்த இருக்கிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





