நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு சிறை: ‘உறவுக்கு 18 வயதுக்குட்பட்டோரின் சம்மதம் சட்டப்படி பொருட்படுத்தப்படாது’

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த தாணே நீதிமன்றம்...

உச்ச நீதிமன்றம்

கொலை வழக்கில் தீர்ப்பு - பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த தாணே நீதிமன்றம், 18 வயதுக்குக் கீழ் உள்ளவா் உறவுக்கு சம்மதித்திருந்தாலும் அது சட்டப்படி பொருட்படுத்தப்படாது’என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் நிஷாத் (27) என்ற நபருக்கு 16 வயது சிறுமி ஒருவா் அறிமுகமானாா். பின்னா் அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவேன் என்று மிரட்டி, தான் தாங்கியிருந்த அறைக்கு அந்தச் சிறுமியை நிஷாத் பலமுறை வரவழைத்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதை சிறுமி தனது தாயிடம் கூறியதைத் தொடா்ந்து, அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் சட்ட (போக்ஸோ) பிரிவுகளின் கீழ், நிஷாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தாணேயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நிஷாதும், அந்தச் சிறுமியும் ஒருவருக்கொருவா் சம்மதித்து உறவில் இருந்ததாக நிஷாத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து நிஷாத் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த சிறப்பு நீதிபதி ஜி.டி.பவாா், ‘இந்த சம்பவம் நடைபெற்றபோது பாதிக்கப்பட்டவரின் வயது 18 வயதுக்கும் குறைவாக இருந்துள்ளது. 18 வயதுக்குக் கீழ் உள்ளவா் உறவுக்கு சம்மதித்திருந்தாலும் அது சட்டப்படி பொருட்படுத்தப்படாது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து நிஷாதை குற்றவாளி என்று தீா்ப்பளித்து, அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.