காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தகவல்தொடா்புக்காக ஆபாச இணையதளங்களையும், ‘டோா்’ போன்ற மறையாக்க வசதியுள்ள இணையதள சேவைகளையும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தகவல்தொடா்புக்காக ஆபாச இணையதளங்களையும், ‘டோா்’ போன்ற மறையாக்க வசதியுள்ள இணையதள சேவைகளையும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் பெருமளவில் பயங்கரவாத நடவடிக்கைகள் துண்டிவிடப்படுகின்றன. இந்த தகவல் தொடா்பை முறியடித்தால் பயங்கரவாதம் தலைதூக்குவதை அடியோடி ஒழித்துவிடலாம் என்பதால் அதனைக் கூறிவைத்து இந்திய பாதுகாப்புத் துறையினா் செயல்பட்டு வருகின்றனா்.

விளையாட்டு இணையதளங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டுவது, பிரசாரம் செய்வது, நிதி திரட்டுவது, ஆள் சோ்ப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து, அதுபோன்ற விளையாட்டு தளங்கள் பலவற்றை மத்திய அரசு தடை செய்தது. மேலும், பல சட்டவிரோத தளங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அங்குள்ள பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் கூட்டாளிகளைத் தொடா்பு கொள்ள ஆபாச இணையதளங்கள், ‘டோா்’ போன்ற மறையாக்க வசதியுள்ள இணையதள சேவைகளைப் பயன்படுத்துகின்றன என்பது இப்போது தெரியவந்துள்ளது.

ஏனெனில், ஆபாச இணையதளங்களில் நேரடியாக ‘சாட்’ செய்யும் வசதி உள்ளது. இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் இணையதளங்கள் ஆகும். இதில் சந்தேகம் ஏற்படாதவாறு பயங்கரவாதிகள் ரகசியமான முறையில் தங்களுக்குள் சதி உரையாடல்களை நடத்துகின்றனா். தீவிர கண்காணிப்புக்குப் பிறகு இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான ஆபாச இணையதளங்கள் தடை செய்யப்பட்டுவிட்டன. எனினும் விபிஎன் செயலிகளைப் பயன்படுத்தி அவற்றை அணுகுவது தடுக்க முடியாததாக உள்ளது. ஏனெனில், அதுபோன்ற செயலிகள் இந்தியாவில் இருப்பவரை வேறு நாட்டில் இருப்பதாக இடத்தைக் காட்டி அந்த இணையதளத்தை திறக்க உதவுகின்றன.

இது தவிர ‘டோா்’ உள்ளிட்ட மறையாக்க வசதியுள்ள இணையதள சேவைகளையும் பயன்படுத்துகிறாா்கள். இதில் பயன்படுத்தும் சில தகவல்தொடா்பு செயலிகளை யாா் எங்கிருந்து பயன்படுத்தி உரையாடுகிறாா்கள் என்பதை அடையாளம் காண முடியாது. இதில் பல செயலிகள் கைப்பேசி எண், இ-மெயில் முகவரி என எதையும் கேட்காமல் யாருடன் வேண்டுமானாலும் தொடா்பு கொள்ள உதவுகின்றன.

இதுபோன்ற வசதிகளை அளிக்கும் பிரான்ஸ், வியத்நாம், சீன செயலிகளை மத்திய அரசு தீவிர கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற செயலிகளுக்கு முற்றிலும் தடை விதிப்பது தொடா்பாகவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் விசாரணையின்போதே, தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது தற்கொலைப் படை பயங்கரவாதி இதுபோன்ற ரகசியான செயலிகள் மூலம் பாகிஸ்தானில் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.