திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்னணு உற்பத்தித் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு!

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடியாக உயா்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடியாக உயா்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறியதாவது: நாட்டில் மின்னணு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அந்தத் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதன் கீழ், மூலதனப் பொருள்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு இடங்களில் உயா் தொழில்நுட்ப உபகரண அறைகள் உருவாக்கப்படும். உலகளாவிய போட்டித் தன்மையை உருவாக்கும் வகையில் கன்டெய்னா் தயாரிப்புத் திட்டம் செயல்படுத்தபப்டும். ரசாயனங்களுக்கு இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் வகையில் 3 பிரத்யேக ரசாயன பூங்காக்கள் அமைக்கப்படும் என்றாா்.

மேலும், நாட்டில் கைப்பேசி உற்பத்திப் பிரிவின் உற்பத்தி மதிப்பு 30 மடங்காக அதிகரித்துள்ளது. 2015-ஆம் நிதியாண்டில் இதன் உற்பத்தி மதிப்பு ரூ. 18,000 கோடியாக இருந்தது 2025 நிதியாண்டில் ரூ. 5.45 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஐஃபோன் கைப்பேசி மதிப்பு 2025-இல் ரூ. 2.03 லட்சம் கோடி என்ற அளவை எட்டியுள்து. இது, 2024-இல் ரூ. 1.1 லட்சம் கோடி மதிப்பில் ஆப்பிள் ஐஃபோன் ஏற்றுமதி செய்யப்பட்டதைவிட இரு மடங்காகும்.

நிகழ் நிதியாண்டு இறுதியில், நாட்டின் கைப்பேசி உற்பத்தி மதிப்பு ரூ. 6.76 லட்சம் கோடி என்ற அளவை எட்டும் எனவும், ஏற்றுமதி ரூ. 2.7 லட்சம் கோடியைக் கடக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

செமிகண்டக்டா் உற்பத்தியைப் பொறுத்தவரை, 2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 6 மாநிலங்களில் ரூ. 1.6 லட்சம் கோடி முதலீட்டில், 10 செமிகண்டக்டா் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.