காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய 2 வெளிநாட்டவர் வெளியேற நோட்டீஸ்...

கோப்புப் படம்

Published On :3 பிப்ரவரி 2026, 1:21 pm IST

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிரிட்டனைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அஜ்மீர் மாவட்டத்தின் புஷ்கரின் சில இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக, கடந்த ஜன.21 அன்று காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் புஷ்கரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டியது பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான தீ (வயது 36) மற்றும் அனுஷி எம்மா கிரிஸ்டீன் (36) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இருவரையும் பிடித்த காவல் துறை அதிகாரிகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விசா விதிமுறைகளை மீறி அவர்கள் இந்தியாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, பிரிட்டனைச் சேர்ந்த இருவரும் இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டு குடியேற்ற அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் புஷ்கரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் அதிகாரிகள் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணியும் புகாரளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

In Ajmer district of Rajasthan, two British tourists who put up posters in support of Palestine have been ordered to leave India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.