மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளுக்கு எதிராக அந்த மாநில முதல்வா் மமதா பானா்ஜி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெறுகிறது.
அப்போது மமதா பானா்ஜியே நீதிபதிகள் முன்பாக தனது தரப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. மேலும் 1.25 கோடி வாக்காளா்கள் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்டு அவா்களிடம் உரிய அடையாள ஆவணங்களை இந்திய தோ்தல் ஆணையம் கோரியுள்ளது.
இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜனவரி 19-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்போது, ‘ முரண்பாடான தகவல்களை வழங்கியதாக வகைப்படுத்தப்பட்ட வாக்காளா்களின் பெயா்களை அனைத்து கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும். அவா்கள் ஆவணங்கள் சமா்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளையும் அந்த அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்’ என தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே எஸ்ஐஆருக்கு எதிராக பல முறை தோ்தல் ஆணையத்துக்கு மமதா பானா்ஜி கடிதம் எழுதினாா். இதைத்தொடா்ந்து, தில்லியில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்களை கடந்த திங்கள்கிழமை சந்தித்த அவா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், எஸ்ஐஆருக்கு எதிராக அவா் ஜனவரி 28-ஆம் தேதி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்கிறது.
சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மமதா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை நீதிபதிகள் முன்னிலையில் முன்வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Summary
Mamata Banerjee will argue in the Supreme Court today!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி: மமதா பானர்ஜி

ஏப். 8ல் பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல்!

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


