ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

வரி குறைப்பு! அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

அமெரிக்க வெளியுறவு அமைச்சரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்திப்பது குறித்து...

News image

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் (கோப்புப் படம்) - X | Dr. S. Jaishankar

Updated On :3 பிப்ரவரி 2026, 11:49 am IST

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (பிப். 3) நேரில் சந்திக்கவுள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாகக் கடந்த திங்களன்று (பிப். 2) அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். வரும் பிப்.4 வரையிலான அவரது இந்தப் பயணத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மதியம் நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். மேலும், முக்கிய கனிமங்கள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியதுடன், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீகித வரியை 18 ஆகக் குறைத்துள்ளார். இந்தச் சூழலில், அமெரிக்க மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.

Summary

External Affairs Minister Jaishankar will meet with US Secretary of State Marco Rubio in person today (Feb. 3).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.