டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்! - சுகாதார அமைச்சகம் தகவல்!

ஜம்மு - காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 5:23 pm IST

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டில் 93,765 நாய்க்கடி சம்பவங்களும், 2025 ஆம் ஆண்டில் 1,12,695 நாய்க்கடி சம்பவங்களும் என 2 ஆண்டுகளில் 2,06,460 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில், அதிகப்படியாக ஜம்மு, கதூவா, உதம்பூர், ரஜௌரி, சாம்பா, டோடா, ரியாசி, பூஞ்ச், ராம்பன், கிஷ்த்வார் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தம் 1,26,844 நாய்க்கடி சம்பவங்கள் (2024- 54,863, 2025 - 71,981) பதிவாகியுள்ளன.

இதனால், நாய்க்கடி சம்பவங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஜம்மு - காஷ்மீர் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறிவியல் கணக்கெடுப்பின் மூலம் ஸ்ரீநகர் மாநகராட்சியில் மட்டும் 64,416 நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

In Jammu and Kashmir, more than 200,000 dog bite incidents have been reported in the last two years, according to Health Minister Sakina Itoo.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.