ஜார்க்கண்டில் யானைகள் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

ஜார்க்கண்டில் யானைகள் தாக்கியது பற்றி..
யானைகள் தாக்கி மூவர் பலி
யானைகள் தாக்கி மூவர் பலி
Updated on
1 min read

ஜார்க்கண்டின் பொகாரோவில் ஐந்து யானைகள் கொண்ட ஒரு கூட்டம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் மகுவாடான்ர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பர்கிபுன்னு கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்தது.

யானைகள் கூட்டம் உணவைத் தேடி கிராமத்துக்கு வந்த நிலையில், அங்கிருந்த வீட்டைத் தாக்கியது. இதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது.

யானை கூட்டத்திடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, வீட்டின் வெளியே இருந்த யானைகளால் மிதித்து மூவரும் கொல்லப்பட்டனர்.

அந்த யானைகள் கூட்டம் பல நாள்களாக பர்கிபுன்னு பகுதியில் சுற்றித் திரிந்து வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Summary

A herd of five elephants trampled to death three members of a family in Jharkhand's Bokaro on Thursday, a forest department official said.

யானைகள் தாக்கி மூவர் பலி
கெட்டி மேளம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com