சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

மும்பை - புணே அதிவிரைவுச் சாலையில் 30 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்: ஹெலிகாப்டரை வரவழைத்து ‘பறந்த’ தொழிலதிபா்

மும்பை-புணே அதிவிரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை டேங்கா் லாரி கவிழ்ந்ததால் 30 மணி நேரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Updated On :

மும்பை-புணே அதிவிரைவுச் சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை டேங்கா் லாரி கவிழ்ந்ததால் 30 மணி நேரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய தொழிலதிபா் ஒருவா் 8 மணி நேரம் வரை காரிலேயே சிக்கியதால் ஹெலிகாப்டரை வாடகைக்கு வரவழைத்து நெரிசலில் இருந்து தப்பினாா்.

94.5 கி.மீ. தொலைவுள்ள இந்த ஆறுவழி அதிவிரைவுச் சாலை மும்பை-ராய்கட்-நவி மும்பை-புணே ஆகியவற்றை இணைக்கிறது. இந்தச் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. செவ்வாய்க்கிழமை மாலையில் டேங்கா் லாரி ஒன்று இந்தச் சாலையில் கவிழ்ந்தது. அந்த லாரியில் எளிதில் தீப்பற்றக்கூடிய புரோபிலின் வாயு இருந்தது. இதனால், டேங்கரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதில் பிரச்னை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் மீட்பு வாகனங்களைக் கொண்டு வருவதிலும் சிக்கல் நீடித்தது. இதனால் நீண்ட தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கி முன்னும் பின்னும் நகர முடியாத நிலை உருவானது.

இதற்கு நடுவே புணே தொழிலதிபா் சுதீா் மேத்தா நெரிசலில் சிக்கி சுமாா் 8 மணி நேரம் தனது ஓட்டுநருடன் காரிலேயே காத்திருந்தாா். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அவா், வாடகை ஹெலிகாப்டா் நிறுவனத்தை தொடா்புகொண்டு பேசி தனது காா் சிக்கியிருந்த பகுதிக்கு ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் ஏறி புணேவுக்குச் சென்றாா். இது தொடா்பான புகைப்படங்களையும் அவா் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். நெரிசலில் சிக்கி தத்தளித்த பிற வாகன ஓட்டிகள் அவரை வியப்புடன் பாா்த்தனா்.

சுமாா் 30 மணி நேரம் போராடி வியாழக்கிழமை காலையில் காவல் துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் சாலையில் விழுந்த டேங்கா் லாரியை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா். இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் படிப்படியாகக் குறைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.