நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு ஆதரவாக மமதா பானர்ஜி வாதிடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசுகையில், உலக நாடுகள் தங்கள் நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை வெளியேற்றுகின்றனர்.
ஆனால், நம் நாட்டில் சில குழுக்கள் வேண்டுமென்றே ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாதிடும் தலைவர்களை நம் இளைஞர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வர்?
நம் நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை ஊடுருவல்காரர்கள் பறித்துக் கொள்கின்றனர்; பழங்குடி சமூகத்தினரின் நிலங்களைப் பறித்துக் கொள்கின்றனர். மேலும், நம் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலையும் உருவாக்குகின்றனர் என்று தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்ததுடன், வழக்கில் முதல்வர் மமதா பானர்ஜியே வாதிட்டார். இதனைக் குறிப்பிட்டே பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் பேசினார்.
Summary
Going to court to shield infiltrators: PM Modi's Jibe At Mamata Banerjee's SIR Plea
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி: மமதா பானர்ஜி

ஏப். 8ல் பவானிபூர் தொகுதியில் மமதா வேட்புமனு தாக்கல்!

பாஜக காட்டுமிராண்டித்தனமான கட்சி! மமதா கடும் விமர்சனம்
மேற்கு வங்கத்தை வென்றால் தில்லியையும் கைப்பற்றலாம்: மமதா உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


