திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைப் பற்றி...

News image

மாநிலங்களவையில் பிரதமர் மோடி. - படம்: பிடிஐ

Updated On :5 பிப்ரவரி 2026, 7:20 pm IST

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுரையுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு கடந்த ஜனவரி 28 ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளின் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

மக்களவையில் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்றவிருந்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் பதில் உரை இல்லாமல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் இன்று காலை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை மாநிலங்களவையில் நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவை நிறைவேற்றியது. மேலும், மாநிலங்களவை இன்று ஒத்திவைக்கப்பட்டு நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Summary

Rajya Sabha adopts Motion of Thanks on President's Address

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.