தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவார் பொறுப்பேற்க வேண்டும் என்று மகாராஷ்டிர அமைச்சரும், என்சிபி தலைவருமான சாகன் புஜ்பால் தெரிவித்தார்.
இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுநேத்ரா பவார் மும்பை வரும்போது அவரைச் சந்தித்து இந்தப் கோரிக்கையை ஏற்குமாறு வலியுறுத்த உள்ளேன். அனைத்து முடிவுகளும் சுநேத்ரா பவாரைக் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்பட்டது.
அவர் என்சிபி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு கூட்டு முடிவே தவிர, எந்தவொரு தனிப்பட்ட தலைவரின் முடிவும் அல்ல. இவ்வாறு குறிப்பிட்டார். மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன.28ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார்.
இதையடுத்து அவரது மனைவி சுநேத்ரா பவார் மகாராஷ்டிர மாநில முதல் பெண் துணை முதல்வராக கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். மறைந்த அஜீத் பவார், கடந்த 2023 ஜூலை மாதம், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் தனது சித்தப்பாவுமான சரத் பவாரிடம் இருந்து பிரிந்து தனி அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
பின்னர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிர துணை முதல்வராக பொறுப்பேற்ற அவர் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜீத் பவார் வகித்த பதவி காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Maharashtra minister and NCP leader Chhagan Bhujbal on Friday said Deputy Chief Minister Sunetra Pawar must take charge as the party president.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார் சுநேத்ரா பவார்!

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுநேத்ரா பவார் வெற்றி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




