மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஹரியாணாவில் ராட்டினம் சரிந்து விபத்து: காவலர் பலி, 13 பேர் காயம்

ஹரியாணாவில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் பலியானார்.

News image

ராட்டினம் சரிந்து விபத்து. - IANS

Updated On :7 பிப்ரவரி 2026, 9:38 pm IST

ஹரியாணாவில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் பலியானார்.

ஹரியாணா மாநிலம், சூரஜ்குன்ட் கண்காட்சியில் சனிக்கிழமை ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பான விடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா, சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாலை 6 மணியளவில் சுமார் 15 பேருடன் ராட்டினம் திடீரென சரிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று அவர்கள் மேலும் கூறினர். மீட்பு நடவடிக்கையின் போது, ​​கடை நடத்துனர் ராகவ்விற்கும் காயம் ஏற்பட்டது.

முன்னதாக, மாலை 5 மணியளவில், கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.

Summary

An on duty police officer died while nearly a dozen people were injured when a swing fell down at Surajkund fair here on Saturday, just an hour after two people, including a child, got hurt in a gate collapse incident, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.