தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியைக் கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியைக் கொடுங்கள், புதிய ரயில் திட்டங்களைக் கொடுங்கள், ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதியைக் கொடுங்கள், வரி வருவாயில் 50 சதவிகிதமாகக் கொடுங்கள், “நீட்”டில் இருந்து விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுங்கள், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கையைக் கொடுங்கள், இதையெல்லாம்தான் நாங்கள் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்கிறோம்! ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்தது வெறும் ஜீரோ! அப்போது நாமும் அவர்களுக்கு எலக்ஷனில் அதையேதான் திருப்பித் தர வேண்டும். பா.ஜ.க. மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக N.D.A. கூட்டணியும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் போன்றே, சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும்!