காதலியுடன் சுற்றித்திரிந்த மகனை நேரில் கண்ட தாய், அப்பெண்ணுடன் திருமண நிச்சயத்தையே முடித்துள்ளார்.
காதலியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த மகனைக் கண்ட தாய், அந்த இடத்திலேயே பெண்ணுடன் திருமண நிச்சயத்தை முடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வீட்டிற்காக வாங்கிச் சென்ற பழங்களை அப்பெண்ணுடன் பரிமாறி, இனிப்பு ஊட்டிவிட்டு பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை விடியோ பதிவும் செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் விடியோவில், மகன் தனது காதலியுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமர்ந்துள்ளார். கணவருடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் தேவையான பொருள்களுடன் சென்றுக்கொண்டிருக்கும்போது பெண்ணுடன் அமர்ந்திருக்கும் மகனைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைகிறார்.
மகனிடம் விசாரித்து அவரைக் கண்டிக்கிறார். பின்னர் வாங்கிச் சென்ற பழங்கள், பூக்களை அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்கு இனிப்பு ஊட்டுகிறார். பாரம்பரிய முறைப்படி திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாகக் கூறி அவர்களை ஆசிர்வாதம் செய்கிறார். தந்தையும் இருவரையும் ஆசிர்வாதம் செய்கிறார்.
ஆனால், மகன் தாயை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். நமது குடும்ப கெளரவம் என்ன ஆவது? என மகனிடம் தாய் கடிந்துகொள்கிறார். இதனை அங்கிருந்த ஒருவரை விடியோ எடுக்கும்படி தாய் கூறியுள்ளார். அதுவும் விடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விடியோவின் முடிவில் மகனும் காதலியும் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெறுகின்றனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அப்பெண் மிகவும் பாக்கியசாலி என்றும், மகனை நல்வழிப்படுத்தும் நோக்கத்தில் கண்டிப்பதாகவும் பெண் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என நினைப்பதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த விடியோ பார்ப்பதற்கு திட்டமிட்டு எடுத்தது போலத் தெரிவதாகவும், உண்மையானது அல்ல எனவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Woman Catches Son With His Girlfriend At Metro Station, Arranges marriage engagement viral video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!

மேலூா் முதல் திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் அமைக்கக் கோரிக்கை

மெட்ரோ ரயில் கழகத்தில் மேலாளர், உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani




