திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை இன்றும் முடக்கம்!

எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்து மக்களவை முடங்கியது பற்றி...

News image

மக்களவை - SANSAD

Updated On :9 பிப்ரவரி 2026, 12:29 pm IST

எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக வாரத்தின் முதல் நாளான இன்று மக்களவை முடங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சிகள் மக்களவையை முடக்கினர்.

இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கவிருந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் பகல் 12 மணிக்கும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே கடந்த வாரம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

Summary

Opposition protests: Lok Sabha adjourned again today!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.