/

கோயில் மேற்கூரை இடிந்து 3 பெண்கள் பலி! 6 பேர் படுகாயம்

மத்தியப் பிரதேசத்தில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக..

News image

கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 9:32 pm IST

மத்தியப் பிரதேசத்தில் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதிக்குட்பட்ட ரூலி பகுதியில் உள்ள மாதா கோயில் மேற்கூரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இன்று இடிந்து விழுந்தது.

சத்தம் கேட்டு கிராம மக்கள் கோயில் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக காவல் துறை, மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தம்பதி உள்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Summary

Three girls killed, six injured in temple roof collapse in Madhya Pradesh's Morena district

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.