உலக நாடுகளில் ஊழல் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி ‘ஊழலுக்கான சாத்தியக்கூறு குறியீடு (சி.பி.ஐ.)’ எனும் பெயரில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும் ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச நிறுவனமான ‘ட்ரான்ஸ்பரன்சி இண்டெர்நேஷனல் (டி.ஐ.)’ எடுத்த 2025-ஆம் ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை(பிப். 10) வெளியிடப்பட்டன.
அதில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சராசரி மதிப்பெண் குறைவாகப் பதிவாகியிருப்பதை கவலைக்குரிய விஷயமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு நாடும் பெறும் மதிப்பெண் அடிப்படையில், அவை அதிக மதிப்பெண் பெற்றால் அரசு நிர்வாகத்தில் ஊழல் குறைவாக இருப்பதாகக் கருதி, பட்டியலில் முன்னிலையும், குறைந்த மதிப்பெண் பெற்றால் ஊழல் மலிந்த நாடுகளாகப் பட்டியலில் பின்தங்கியும் வரையறுக்கப்படுகின்றன.
அந்த வகையில், டென்மார்க் 89 புள்ளிகளுடன் முதலிடமும், அதற்கடுத்தடுத்த இடங்களில் ஃபின்லாந்து, சிங்கப்பூர் சிறந்த நாடுகளாக திகழ்கின்றன. மேற்கண்ட 3 நாடுகளும் தொடர்ந்து முன்னிலை பெற்று சர்வதேச சமூகத்துக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடைசி மூன்று இடங்களில், தெற்கு சூடான், சோமாலியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் உள்ளன.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மொத்தமுள்ள 182 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், 122 நாடுகள் நூற்றுக்கு 50க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வு முடிவுகள், இதன்மூலம், ஊழலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் திணறுவதை குறிக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான ஆய்வில், 5 நாடுகள் மட்டுமே 80க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பதும், கடந்த பத்தாண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 12 ஆக இருந்த இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருப்பதும் கவலைக்குரிய விஷயமாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.
‘ஊழலுக்கான சாத்தியக்கூறு குறியீடு (சி.பி.ஐ.)’ 2025 ஆய்வில் உலகளாவிய சராசரி மதிப்பெண் அளவுகோல் 42-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான, வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் சராசரிக்கும் கீழ் புள்ளிகளைப் பெற்று பின்தங்கியே நீடிக்கின்றன. இந்தியா நூற்றுக்கு 39 மதிப்பெண் பெற்று 91-ஆவது இடத்தில் உள்ளது.
Summary
most countries are failing to keep corruption under control, with 122 out of the 182 nations and territories surveyed scoring less than 50 points.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக செஸ் சாம்பியன்ஷிப்பை குகேஷ் தக்கவைப்பாரா? இறுதிப் போட்டிக்கான இடம், தேதிகள் அறிவிப்பு!
போட்டியால் உருவாகும் புது உலகம்!

போட்டியால் உருவாகும் புது உலகம்!

பயங்கரவாதத்தை வேரறுக்க கூட்டு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




