மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் மாநில செயலக மந்திராலயாவில் தனது அமைச்சர் பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் ஜன. 28 ஆம் தேதி பாராமதியில் நேரிட்ட விமான விபத்தில் பலியானார். இதையடுத்து கடந்த ஜனவரி 31-ல் சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரது மூத்த மகன் பார்த் பவாரும் துணை முதல்வர் அலுவலகத்தில் சுநேத்ரா பொறுப்பேற்றுக்கொண்டபோது உடனிருந்தனர். அதோடு, என்சிபி தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே, சாகன் புஜ்பால் தனஞ்சய் முண்டே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சுநேத்ரா பவார் கலந்துகொள்கிறார். பிப்ரவரி 23 பட்ஜெட் கூட்டத்தொடருக்கான வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்பார்.
சுநேத்ரா பவாருக்கு ஆட்சித்துறை, விளையாட்டு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மேலும், பீட் மற்றும் புணேவின் பாதுகாவலர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று அதிகாலை புணேவிலிருந்து மும்பை வந்த சுநேத்ரா பவார், தாதர் பகுதியில் உள்ள சைத்யபூமியில் சித்தி விநாயகர் கோயில் மற்றும் பி.ஆர். அம்பேத்கரின் நினைவிடத்தில் வழிபாடு மேற்கொண்டார்.
துணை முதல்வர் சுநேத்ராவும், அவரது மூத்த மகனும் சேர்ந்து என்சிபி அலுவலகத்திற்குச் சென்று மந்திராலயத்திற்குச் செல்வதற்கு முன்பு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்தனர்.
அஜீத் பவாரின் மறைவுக்குப் பிறகு பிப்ரவரி 7 அன்று நடைபெற்ற முதல் தேர்தலில், திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, அவரது கட்சி 73 இடங்களில் 51 இடங்களைப் பெற்று புணே ஜில்லா பரிஷத்தைத் தக்க வைத்துக்கொண்டது.
என்சிபி மற்றும் சரத் பவாரின் என்சிபி (எஸ்பி) 'கடிகாரம்' சின்னத்தில் இணைந்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Maharashtra Deputy Chief Minister Sunetra Pawar on Tuesday assumed her ministerial duties at the state secretariat Mantralaya, 13 days after the death of her husband and Deputy CM Ajit Pawar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குத்துச்சண்டை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ப்ரீத்தி பவார்..! தங்கம் வெல்வாரா?
துணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
துணை முதல்வராக திருமாவளவன்? விசிக வலியுறுத்தல்

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: மகாராஷ்டிர துணை முதல்வரின் சகோதரா் உள்பட 8 போ் விடுவிப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




