பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மேகாலயா சுரங்க வெடிவிபத்து! மேலும் இருவர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

மேகாலயா சுரங்க வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது குறித்து...

மேகாலயா சுரங்க வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு... - ANI

Published On :

மேகாலயா கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில், சட்டவிரோத நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

இதனால், இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின், மயின்ஸ்ன்காட் கிராமத்தின் தங்குஸ்கூ பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப். 5 அன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த சுமார் 9 சுரங்கத் தொழிலாளர்கள் அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராம்சந்த்ரா பைஷ்நப் மற்றும் நிமாருதீன் ஆகிய இருவரும் நேற்று (பிப். 11) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான 30 பேரில், 8 தொழிலாளர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த சுரங்கம் குறித்து உரிய விசாரணையை மேற்கொள்வதற்கு மேகாலயா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் அசாம் அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Two more people who were critically injured in an illegal mine explosion in Meghalaya's East Jaintia Hills district have succumbed to their injuries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.