மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் முடியும்வரையில், அவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி, நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவைச் செயலரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வழங்கியுள்ளனர்.இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் தீர்க்கப்படும் வரையில், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளக் கூடாது மாட்டார் என்று ஓம் பிர்லா முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மக்களவைத் தலைவரான ஓம் பிர்லாவை நீக்கக் கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியிடம் போதுமான எம்.பி.க்கள் இல்லை.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அவையில் உள்ள எம்.பி.க்களின் 50%-க்கு அதிகமான ஆதரவு தேவை.
ஆனால், எதிர்க்கட்சியினருக்கு போதுமான எம்.பி.க்கள் பலம் இல்லாததால் அவைத் தலைவருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
Summary
Om Birla decided on moral grounds that he will not attend the proceedings of House till disposal of notice: Sources
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அவசர முடிவுகளை எடுக்க மு.க. ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! தீர்மானம் நிறைவேற்றம்!!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

சவால்களை வாய்ப்புகளாக மாற்றியவா் பிரதமா் மோடி - மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புகழாரம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




