தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லாவுக்கு முதலிடம்!

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது குறித்து...

News image

சிம்லா - படம் - பிடிஐ

Updated On :11 பிப்ரவரி 2026, 8:11 am IST

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் நாட்டிலுள்ள சிம்லாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இலங்கையின் நுவரெலியா உள்ளது.

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலை பிரபல சுற்றுலா இணையதள நிறுவனமான அகோடா வெளியிட்டுள்ளது.

இதில் ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது. மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் சிம்லாவில், புகழ் பெற்ற பிஜிலி மகாதேவ் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவலிங்கம் பனியால் மூடப்பட்டிருக்கும்.

சிம்லாவில் இருந்து 19 கி.மீ. தொலைவில் குர்பி மலை உள்ளது. இந்த மலையில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால், இயற்கை சீர்குலையாமல் உள்ளது.

பிரமிக்க வைக்கும் ஏரிகளுடன், செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டி திடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ளது.

சுற்றுலாவுக்குச் செல்லும் பலரும் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. இத்தகைய காரணங்களால் சிறந்த மலைப்பிரதேசங்களின் பட்டியலில் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது.

சிம்லா மலைப்பிரதேசத்திலுள்ள குடியிருப்புகள்

சிம்லா மலைப்பிரதேசத்திலுள்ள குடியிருப்புகள் - படம் - பிடிஐ

சிம்லாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில், இலங்கையின் மலையகப் பகுதியில் அமைந்துள்ள நுவரெலியா உள்ளது. இது குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது.

3வது இடத்தில் மலேசியாவின் கேமரன் ஹைலேண்ட்ஸ், 4வது இடத்தில் வியட்நாமின் சாப்பா மலைப்பகுதி உள்ளது. 5 வது இடத்தில் இந்தோனேசியாவின் பான்டுங் மலைத்தொடர், 6 வது இடத்தில் பூடானின் திம்பு, 7 வது இடத்தில் வியட்நாமின் டலாட் மலை உள்ளது.

Summary

Shimla tops the list of best hill stations in Asia!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.