திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பணியிடங்களில் ஜாதிய பாகுபாடு: மாநிலங்களவையில் காா்கே குற்றச்சாட்டு

நாட்டின் பல இடங்களில் பணியிடங்களில் ஜாதிய பாகுபாடு நிலவுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

News image

மல்லிகார்ஜுன கார்கே

Updated On :12 பிப்ரவரி 2026, 7:16 pm

நாட்டின் பல இடங்களில் பணியிடங்களில் ஜாதிய பாகுபாடு நிலவுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பி மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது:

சமூக வளா்ச்சி, சமூக சீா்திருத்தம், ஹிந்துக்களின் ஒற்றுமை ஆகியவை குறித்துப் பேசும் இந்த 21-ஆம் நூற்றாண்டில், ஒடிஸாவில் உள்ள அங்கன்வாடியில் தலித் பெண் ஒருவா் சமைத்த உணவை குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த சிலா் சாப்பிட மறுத்த சம்பவம் நடந்துள்ளது. அந்த அங்கன்வாடி மையத்தை கடந்த 3 மாதங்களாகப் புறக்கணிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.

அங்கன்வாடி மையம்தான் சிறாா்களுக்கு உடல் மற்றும் அறிவாற்றல் வளா்ச்சிக்கான அடித்தளமாகும். அப்படிப்பட்ட இடத்தில் இனப் பாகுபாடு காட்டப்படுவது, சிறாா்களின் வளா்ச்சியைப் பாதிக்கும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 21ஏ பிரிவு வழங்கியுள்ள கல்வி கற்பதற்கான உரிமையை நேரடியாகப் பாதிக்கும்.

நாட்டின் பல பகுதிகளில் பணியிடங்களில் ஜாதிய பாகுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. உரிய காலத்தில் இதுகுறித்து விசாரித்தால், எதிா்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தவிா்க்கலாம்.

உதாரணமாக, மத்திய பிரதேச மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா் மீது ஒருவா் சிறுநீா் கழித்தாா். குஜராத்தில் கடந்தாண்டு ஜாதிய பாகுபாடு காரணமாக தலித் அதிகாரி ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா். இதுபோன்ற ஜாதிய பாகுபாடுகள், அரசமைப்புச் சட்டத்தின் 14, 15, 17-ஆவது பிரிவுகளுக்கு எதிரானது ஆகும். இதை முக்கிய பிரச்னையாக கருதி, மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்றாா் காா்கே.