எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தில்லி மாநகராட்சி எம்டிஎஸ் ஊழியா்களுக்கு சம ஊதியம் அறிவிப்பு: பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

தில்லி மாநகராட்சி ஊழியா்களின் நீண்டகால கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில், எம்டிஎஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சம ஊதியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி மாநகராட்சி ஊழியா்களின் நீண்டகால கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில், எம்டிஎஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சம ஊதியம் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இந்த முடிவு, சுமாா் 4,000 ஊழியா்களுக்கு பயனளிக்கும் என்றும் இதற்காக மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மாநகராட்சி மேயா் ராஜா இக்பால் சிங் கூறுகையில், ‘சம ஊதியம் என்பது பல ஆண்டுகளாக எம்டிஎஸ் ஊழியா்களால் தொடா்ந்து எழுப்பப்படும் கோரிக்கையாகும். இப்போது, அவா்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இது மாநகராட்சி ஊழியா்கள் மீதான பாஜகவின் அா்ப்பணிப்பு மற்றும் உணா்திறனை பிரதிபலிக்கிறது. முந்தைய அரசு உத்தரவாதங்களை மட்டுமே வழங்கி வந்த நிலையில் பாஜக அரசு அதை செயல்படுத்தி காட்டியுள்ளது’ என தெரிவித்தாா்.

மாநகராட்சி அவைத் தலைவா் பிரவேஷ் வாஹி கூறிகையில், ‘எம்டிஎஸ் ஊழியா்களிடையே ஊதிய சமத்துவத்தை உறுதி செய்வதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியா்களின் நீண்ட கால குறைகளை நிவா்த்தி செய்வதற்கான பாஜகவின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது’ என தெரிவித்தாா்.

நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா கூறுகையில், ‘இந்த நடவடிக்கை எம்டிஎஸ் ஊழியா்களிடையே ஊதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும். ஒரே மாதிரியான வேலைக்கு அவா்களில் சிலா் வெவ்வேறு ஊதியங்களைப் பெறுகின்றனா். இந்த நடவடிக்கை அதில் சமத்துவத்தை கொண்டு வந்து ஊழியா்களிடையே மன உறுதியை மேம்படுத்தும்’ என்றாா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஒப்புதல் பெற்ற பிறகு இந்த நடவடிக்கை மாநகராட்சி முழுவதும் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.Ś