வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கலால் கொள்கை வழக்கு: அமலாக்கத் துறை அழைப்பாணைகளுக்கு எதிரான மனுவை திரும்பப் பெற்றாா் கேஜரிவால்

கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெற அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி.

News image
அரவிந்த் கேஜரிவால்- கோப்புப் படம்
Updated On :12 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.

அழைப்பாணைகளைத் தொடா்ந்து அமலாக்கத் துறை முன்பாக ஆஜராகாதது தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்குகளிலிருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை மேலும் தொடர அவா் விரும்பவில்லை என தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் தெரிவித்தாா்.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, விசராணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய முகமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து, வழக்கு திரும்பப் பெறப்படும் நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்து.