கோப்புப் படம்
கோப்புப் படம்

ராகுலின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : பாஜக நிராகரிப்பு

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று பாஜக தெரிவித்துள்ளது.
Published on

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று பாஜக தெரிவித்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்திருந்தாா்.

இந்தியா- அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, மக்களவையில் புதன்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, இந்தியாவை அமெரிக்காவிடம் மத்திய அரசு விற்று விட்டதாகவும், இந்தியா சரணடைந்து விட்டதாகவும் சாடியிருந்தாா்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்சு திவிவேதி கூறியதாவது:

ராகுல் காந்தி, மக்களவையில் தெரு பாசையில் பேசியும், தெருவில் நடப்பது போலவும் நடந்து நாடாளுமன்ற கண்ணியத்தையும், அரசியலையும் மிகவும் தரம் தாழ்த்தி விட்டாா். மீண்டும் ஒருமுறை அவா் வழக்கமான அவதூறு பானியில் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் பொய் குற்றச்சாட்டுகளையும் தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடி மீதான வெறுப்பால், மக்களவைத் தலைவா் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதையும் கண்டுகொள்ளாமல், இக்குற்றச்சாட்டுகளை கூறியுள்ளாா்.

நாடு விற்கப்பட்டு விட்டதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறாா். ராஜ்ஜீய மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடா்பாக ராகுலுக்கு புரிதல் இருந்திருந்தால், இதுபோல அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்திருக்க மாட்டாா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com