கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று ஆண்டுகளில் 32,000க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மூன்று ஆண்டுகளில் 32,000 க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.
Published on

ஜம்மு-காஷ்மீரில் மூன்று ஆண்டுகளில் 32,000 க்கும் மேற்பட்டோருக்கு புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிடிபி எம்எல்ஏ வாஹீத் பராவின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் சகினா இட்டூ பேரவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த மூன்று ஆண்டுகளில் யூனியன் பிரதேசத்தில் 32,425 புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில், காஷ்மீரில் இருந்து அதிகமான புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021-2024 வரையிலான மூன்று ஆண்டுகளில் பள்ளத்தாக்கில் 25,621 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அவர்களில் 2021 ஆம் ஆண்டில் 4,333 ஆண்கள் மற்றும் 3,688 பெண்கள் உட்பட 8,021 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2023 இல் 8,621 (4,685 ஆண்கள், 3,936 பெண்கள்) மற்றும் 2024 இல் 8,979 (4,789 ஆண்கள் மற்றும் 4,190) புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஜம்மு பிராந்தியத்தில், 2023-2025 வரையிலான மூன்று ஆண்டுகளில் 6,804 புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில், 2023 இல் 1,177 ஆண்கள் மற்றும் 859 பெண்கள் உட்பட 2,026 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

2024 இல் 2,187 வழக்குகள் (1,248 ஆண்கள் மற்றும் 939 பெண்கள்) பதிவாகியுள்ளன. 2025 இல் 1,116 ஆண்கள் மற்றும் 1,465 பெண்கள் உட்பட 2581 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நிதி ஆயோக் மற்றும் ஐசிஎம்ஆர் ஆகியவற்றுடன் இணைந்து ஜம்மு-காஷ்மீருக்கான புற்றுநோய் கட்டுப்பாட்டு உத்தியை அரசு வகுக்கும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா பட்ஜெட்டில் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஆரம்ப கட்டத்திலேயே நோயினை கண்டறிந்து அவற்றிற்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Summary

Over 32,000 cancer cases have been reported in Jammu and Kashmir in the last three years, with lung, breast, oral, cervical, prostate and pancreatic cancers being the most common.

கோப்புப்படம்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com